or

xtrade logo

வர்த்தகத் தகவல்

லீவரேஜ் மற்றும் மார்ஜின்

லீவரேஜ்

லீவரேஜ் என்பது உங்கள் CFD மார்ஜின் டெபாசிட் கட்டுப்பாடுகள் பல மடங்கு அதிகமான சொத்தைக் கட்டுப்படுத்தி, பெரிய அளவில் வர்த்தகத் தாக்கத்தையும் அதிகரிக்கப்பட்ட பலனையும் வழங்குவதாகும். உதாரணமாக: உங்கள் டெபாசிட் $1,000 மற்றும் உங்கள் ஈகுவிட்டி $1,000 மற்றும் வழங்கப்பட்ட லீவரேஜ் 1:50. உங்கள் லீவரேஜ் தொகை 1,000 x 50 = $50,000 ஆகும். தேவையான செக்யூரிட்டிகள் (மார்ஜின் டெபாசிட்) ஒவ்வொரு வர்த்தகத் திரையிலும் காட்டப்படும். லீவரேஜ் என்பது லாபங்களைப் பலமடங்காக்கப் பயன்படுத்தும் நுட்பமாகும்; இருப்பினும் லீவரேஜ் மூலம் லாபங்களைப் பலமடங்காக்கலாம். லீவரேஜ் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உங்கள் டெப்பாசிட் மூலதனத்தை இழக்கும் அபாயமும் அதிகமாக இருக்கும். லீவரேஜ் உங்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மார்ஜின் தேவைகள் அதிலுள்ள வர்த்தக உடமையின் மதிப்பை சரிவிகிதத்தில் அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்துகொள்ளவும்.

மார்ஜின் அழைப்பு என்றால் என்ன?

உங்கள் மார்ஜின் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்ப்டும், ஒவ்வொரு நேரத்திலும் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறியும் பயன் வழங்கப்படும். பராமரிப்பு மார்ஜின் நிலை என்பது திறந்த நிலையைப் பராமரிக்கத் தேவையான ஈக்விட்டியின் குறைந்தபட்சத் தொகையாகும். உங்கள் ஈக்விட்டி குறைந்தபட்சத் தொகைக்குக் கீழே இறங்கினால், Xtrade மார்ஜின் அழைப்பு வர்த்தகத்தைத் தானாகச் செயல்படுத்தி உங்கள் கணக்கு ஈக்விட்டி பராமரிப்பு மார்ஜின் நிலைத் தேவைகளைத் தாண்டும் வரை ஏதேனும் திறந்திருக்கும் நிலைகளை மூடவும்.

மார்ஜின் காலின் எடுத்துக்காட்டு:

உள்நுழைந்து கிரெடிட் கார்டு மூலம் $10,000 டெபாசிட் செய்தீர்கள்.

  • ஈக்விட்டி: $10,000 (டெபாசிட்கள் - பணமெடுத்தல்கள் + திறந்திருக்கும் நிலைகளின் லா&ந).
  • இருக்கும் இருப்பு: $10,000 (இருப்பு + திறந்த நிலைகளின் லா&ந - துவக்கநிலை மார்ஜின்கள்).
  • லா&ந = $0 (தினசரி பிரீமியம்கள் உள்ளிட்ட அனைத்து திறந்த நிலைகளின் மொத்த லாபம் மற்றும் நஷ்டம்).

காலை 10.20 - 200 கூகிள் பங்குகளை (CFDகள்) $540.00இல் வாங்குகிறீர்கள்.
நீங்கள் வாங்கிய மொத்தத் தொகை: 200*$540 = $108,000.
கூகிள் பங்குகளுக்குத் தேவையான துவக்கநிலை மார்ஜின் 2% ஆகும்: $2,160.
200 கூகிள் பங்குகளை பராமரிக்கத் தேவையான பராமரிப்பு மார்ஜின் 1% ஆகும்: $1,080.
உங்கள் ஈக்விட்டி $1,080 க்குக் கீழ் குறைந்தால் உங்களுக்கு மார்ஜின் அழைப்பு வரும். Xtrade உங்கள் திறந்த நிலைகளை வெளியேற்றும்.

  • ஈக்விட்டி: $10,000 ($10,000 + $0).
  • கூகிள் பங்குகளை வாங்கிய பிறகு இருக்கும் இருப்பு: $7,840 ($10,000 - 2%*$108,000).
  • லா&ந = $0.

பிற்பகல் 1.00 - கூகிள் பங்குகள் $510க்குக் குறைந்துள்ளது.

  • 'ஈக்விட்டி' $4,000 (-$6,000 + $10,000) ஆகும்.
  • இருக்கும் இருப்பு: $1,840 ($10,000 - 2%*$108,000 + 200*($510 - $540)).
  • லா&ந = -$6,000 (200*$540 - 200*$510).

பிற்பகல் 1:15 - கூகிள் பங்குகள் $495க்கு வீழ்ச்சியடைந்தது. மார்ஜின் அழைப்பு வரும், உங்கள் நிலையை Xtrade சரிசெய்யும்.

  • ஈக்விட்டி: $1,000 (-$9,000 + $10,000).
  • இருக்கும் இருப்பு: $0 ($10,000 - 2%*$118,000 + 200*($495 - $540)).
  • லா&ந = -$9,000 (200*$495 - 200*$540).

உங்கள் ஈக்விட்டி $1,000 ஆக இருப்பதாலும் 200 கூகிள் பங்குகளுக்கான திறந்த நிலையைப் பராமரிக்க $1,080 தேவை ஆகியவை மார்ஜின் அழைப்பை நீங்கள் பெற்றதற்கான காரணமாகும். ஆகவே Xtrade உங்கள் நிலையை லிக்விடேட் செய்யும். உங்கள் நடப்பு இருப்பு:

  • ஈக்விட்டி: $1,000.
  • இருக்கும் இருப்பு: $1,000 (டெபாசிட்கள் - பணம் எடுத்தல்கள் + மூடிய நிலைகளின் லா&ந).
  • லா&ந = $0 (திறந்த நிலைகள் எதுவுமில்லை).

துவக்கநிலை மார்ஜின்

புதிய நிலையைத் தொடங்க, உங்களுக்குக் கிடைக்கும் கணக்கு ஈக்விட்டி வர்த்தகத்தின் துவக்கநிலை மார்ஜின் நிலைத் தேவையை அதிகரிக்க வேண்டும். மார்ஜின் நிலைகள் பல்வேறு நிதிச் சாதனங்களிடையே மாறுபடும்.

தேவையான மார்ஜின் மொத்தத்தை வர்த்தகத் தளப் பக்கத்திற்கு இடது பக்கத்தில் உள்ள எனது கணக்கு பட்டியில் பார்க்கலாம். உங்கள் துவக்கநிலை மார்ஜின் நிகழ்நேரத்தில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளவும்.

பராமரிப்பு மார்ஜின் நிலை

உங்கள் புதிய நிலையைத் திறந்ததாக வைக்க, உங்கள் கணக்கில் உள்ள ஈக்விட்டி மொத்த பராமரிப்பு மார்ஜின் நிலையைத் தாண்டி விடும். பராமரிப்பு மார்ஜின் நிலைத் தேவைகள் ஒவ்வொரு நிதிச் சாதனத்திற்கும் குறிப்பிட்டதாக இருக்கும். Xtrade எப்போதும் ஒவ்வொரு தனிப்பட்டச் சாதனத்திற்கும் உரிய பராமரிப்பு மார்ஜின் நிலையைக் காட்டும்.

முதன்மைப் பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள எனது கணக்குப் பட்டியில் உள்ள பராமரிப்பு மார்ஜினை நீங்கள் காணலாம். உங்கள் பராமரிப்பு மார்ஜின் நிகழ்நேரத்தில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளவும்.

பாதுகாப்பு அளவீடு

உங்கள் நிதிப் பாதுகாப்புக்கு, கூடுதல் மார்ஜின் வழங்கப்படவில்லை என்றால், Xtrade உங்கள் சார்பாக நிலைகளைத் தானாக மூடும். லீவரேஜ் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உங்கள் டெப்பாசிட் மூலதனத்தை இழக்கும் அபாயமும் அதிகமாக இருக்கும். லீவரேஜ் உங்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.