புதிய கணக்கைத் திறக்கவும்
Account Login
எங்களுடைய உதவிப் பிரிவை பாருங்கள்
பதிவுசெய் க்கு சென்று, படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள், உங்கள் வர்த்தகக் கணக்கில் உள்நுழைவீர்கள். பாப்-அப் செய்தியில் தற்போக்காக உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பார்ப்பீர்கள், அதை உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள வேண்டும். பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் இரண்டையும் கொண்ட வரவேற்பு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
அது இலவசமானது. எக்ஸ்டிரேடு பதிவுக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
இல்லை. நீங்கள் ஒரு வர்த்தகக் கணக்கை மட்டும்தான் தொடங்க முடியும்.
நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவேண்டியுள்ளது. எஃப்எக்ஸ் மற்றும் சிஎஃப்டியில் வர்த்தகம் செய்வது, குறிப்பாக அந்த வர்த்தகம் வெளியிலிருந்து பெறப்பட்ட முதலீட்டில் இயங்கும் தன்மை காரணமாக இழப்பு அபாயங்களுக்கு உட்பட்டது. எங்களுடைய முழுமையான அபாய எச்சரிக்கைகளப் படிப்பதற்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த வலைத்தளம் மற்றும் வெளிப்படுத்தல் ஆவணங்களில் உள்ள தகவல் பொதுவான தன்மையுடையவை, உங்கள் தனிப்பட்ட சூழல்கள், நிதி நிலைமை அல்லது தேவைகளை கருத்தில் கொண்டவை அல்ல. நீங்கள் எங்களுடைய வாடிக்கையாளர் ஒப்பந்தத்தை கவனமாகப் படித்து, இது போன்ற விஷயங்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு உகந்ததா என்று முடிவெடுப்பதற்கு முன்னர் தனிப்பட்ட ஆலோசனையை நாடுங்கள்.
நீங்கள் ஏற்கனவே வர்த்தகக் கணக்கைத் தொடங்கி, கணக்கு சரிபார்ப்புக்காக உங்கள் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து டெப்பாசிட் செய்திருந்தால்; நீங்கள் வர்த்தகம் செய்யத் தயார் நிலையில் இருக்கிறீர்கள்.
"ஆம்": புதிய மற்றும் தொழில்முறை வர்த்தகர்கள் இருவருக்கும் பொருந்தும் எங்களுடைய கல்வி மையம் மற்றும் எக்ஸ்டிரேடின் டுடோரியல் வீடியோக்கள், ஈ-புத்தகங்கள் மற்றும் பிற உதவிப்பொருட்கள்
கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனமாக — பல்வேறு சட்டங்களின் படியும், இணக்கத் தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் ஏற்பு செயல்முறைகளுக்கு ஏற்ப — கேஓய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்திருங்கள்) தகவல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. உங்கள் அடையாளச் சான்றுகளின் இரகசியத்தன்மை, பாதுகாப்பதற்கு மற்றும் நேர்மையாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம்.
தயவுசெய்து எண்களையும் எழுத்துக்களையும் மட்டும் பயன்படுத்துங்கள். அதை நிரப்பும்போது சின்னங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.
வாடிக்கையாளர் கோரினால் தவிர பூஜ்ஜிய இருப்பு கொண்ட கணக்குகள் மூடப்படாது.
"ஆம்": எங்களுடைய வாடிக்கையாளரின் நலனே முதன்மையானது, எனவேதான் எக்ஸ்டிரேடில் உங்கள் இருப்புத்தொகை நெகட்டீவாக செல்லாது. நெகட்டீவ் இருப்புத்தொகை பாதுகாப்பு, வர்த்தகர் கடனாளியாவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். துரதிஷ்டவசமாக, அனைத்து ரீடெயல் ஃபாரெக்ஸ் புரோக்கர்களும் நெகட்டீவ் இருப்புத்தொகை பாதுகாப்பை அளிப்பதில்லை. அனுபவம் இல்லாத வர்த்தகர்களுக்கு, மார்ஜின் இல்லாதது குறித்தான அழைப்பு என்பது உங்கள் முதலீட்டை மட்டும் இழப்பதற்கும் கடனாளியாவதற்கு இடையிலான வித்தியாசம் ஆகும். இது நுட்பமானது ஆனால் முக்கியமான மாற்றம். ஃபாரெக்ஸ் வர்த்தகத்தில், உங்களால் தாங்கக்கூடிய அளவு பணத்தை இழப்பதை நீங்கள் தாங்கிக் கொள்ளலாம் (எல்லா நேரங்களிலும் வெற்றிபெறக்கூடிய சிறந்த வர்த்தகர் என்று ஒருவர் இல்லை). இருப்பினும், உங்களுக்கு எவ்வளவு அனுபவம் இருந்தாலும் கடனாளியாவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
உள்நுழைவுப் பெட்டியின் கீழே உள்ள "கடவுச்சொல் மறந்துவிட்டதா" என்பதை கிளிக் செய்யுங்கள், உங்கள் கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, எக்ஸ்டிரேடு கணக்கில் உள்நுழையுங்கள்; பிறகு கணக்குத் தெரிவுகள் > கடவுச்சொல் மாற்று என்பதை கிளிக் செய்யுங்கள்
கணக்கு மேலாண்மை சேவைகளை நாங்கள் வழங்குவதில்லை. நீங்கள்தான் கணக்கின் ஒரே உரிமையாளர் மேலும் இறுதி முடிவு எடுக்கக்கூடியவர்.
எளிதாகப் பயன்படுத்தக் கூடிய எங்களுடைய வெப் பிளாட்ஃபார்மைப் பதிவிறக்கவேண்டிய தேவை இல்லை.
துரதிஷ்டவசமாக தற்போது நாங்கள் எம்டி4 பிளாட்ஃபார்மைக் கொண்டிருக்கவில்லை.
நீங்கள் வர்த்தகக் கணக்கைத் தொடங்கியவுடன் டெமோ கணக்கு செயல்படுத்தப்படும். *குறைந்தபட்ச டெப்பாசிட்டைர் பொருத்தது
என் கணக்குப் பகுதியில் உள்ள "ஸ்விட்ச்" பட்டனை கிளிக் செய்து உண்மையான மற்றும் டெமோ கணக்குகளுக்கு இடையில் மாறிக்கொள்ளலாம்.
அசல் பிளாட்ஃபார்மின் அனைத்து அம்சங்களும் செயல்பாடுகளும் டெமோ பிளாட்ஃபார்மில் கிடைக்கும் அதே நேரத்தில், சிமுலேஷன் உண்மையான சந்தை நிலவரங்களை பிரதிபலிக்க முடியாது என்பதை பயனர்கள் நினைவில் கொள்ளவேண்டும். சிமுலேஷன் மூலம் செய்யப்படும் வர்த்தகம் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தாது; அதேநேரம் உண்மையான வர்த்தகத்தில் குறிப்பாக நிலை அளவு மிகப்பெரிதாக இருக்கும்போது அது சந்தையை பாதிக்கிறது என்பது ஒரு முக்கியமான வித்தியாசம்.
பதிவுபெற்ற 7 நாட்களுக்குப் பிறகு தானாகவே உங்கள் டெமோ கணக்கில் நிதி சேர்க்கப்படும்.
எக்ஸ்டிரேடு டெமோ கணக்கு காலாவதியாவதில்லை.
யுஎஸ்ஏ ல் சிஎஃப்டிசி (கமாடிட்டி ஃப்யூச்சர் டிரேடிங் கமிஷன்); கனடாவில் ஓஎஸ்சி (ஓன்டாரியோ செக்யூரிட்டில் கமிஷன்) மற்றும் பிசிஎஸ்சி (பிரிட்டீஷ் கொலம்பியா செக்யூரிட்டீஸ் கமிஷன்) ன் ஒழுங்குமுறைகளின் படி, அந்த நாடுகளின் குடிமக்களை எங்களிடம் வர்த்தகக் கணக்குத் தொடங்குவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை. ஏதேனும் அசௌகர்யம் ஏற்பட்டு இருந்தால் வருந்துகிறோம்.
வாடிக்கையாளர்களின் நிதிப் பாதுகாப்பை எக்ஸ்டிரேடு உறுதிசெய்கிறது மேலும் ஈயு ன் எம்ஐஎஃப்ஐடி விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குகிறது.
எக்ஸ்டிரேடு இரண்டு வகையான ஊக்கத்தொகைகளை வழங்குகிறது: கிரெடிட் மற்றும் பணம்.
பண ஊக்கத்தொகை உடனடியாக வரவு வைக்கப்படும், பிறகு தேவைப்படும் எக்ஸ்பாய்ண்ட்களை பூர்த்திசெய்யவேண்டியிருக்கிறது; கிரெடிட்/நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை விஷயத்தில் இது எதிர்மாறாக நிகழும்.
எங்களுடைய சமீபத்திய புரமோஷன்களைப் பார்ப்பதற்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதை உங்கள் கணக்கில் வரவு வைப்பதற்கு லைவ் சேட், மின்னஞ்சல் அல்லது அழைப்பு மூலம் எங்களுடைய வாடிக்கையாளர் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் வர்த்தக செயல்பாட்டின் அளவு மதிப்பு புள்ளிகளில்.
உதாரணமாக: $100,000 மதிப்புள்ள ஒரு நிலையை யுரோ/யூஎஸ்டி ல் நீங்கள் துவங்கினால், அதன் முடிவில் 100 Xபுள்ளிகளைப் பெறுவீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு $1,000 வர்த்தகத் தொகைக்கும் 1 Xபுள்ளிகள் எனக் கணக்கிடப்படும்.
அதற்கு பதிலாய் பண ஊக்கத்தொகையைப் பெற்றிருக்கிறீர்கள், அது தேவையான அளவு எக்ஸ்பாய்ண்ட்களைப் பூர்த்தி செய்வதற்கு முன்னரே வரவு வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் முதல் டெப்பாசிட்டுக்கு முன்னர் உங்கள் கணக்கை சரிபார்த்திருக்கிறீர்கள். உங்கள் கணக்கில் பணம் செலுத்தியவுடன் கணக்கு சரிபார்ப்பு ஊக்கத்தொகையைப் பெறுவீர்கள்.
ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஒர நிறுவனமாக, பணமோசடி மற்றும் அடையாளத் திருட்டுக்கு எதிரான பல்வேறு சட்டங்களின்படியும் நம்முடைய ஒழுங்குமுறை அமைப்புகள் உருவாக்கிய செயல்முறைகளுக்கு இணக்கமாகவும் செயல்படுகிறோம்: சிஒய்எஸ்ஈசி, ஏஎஸ்ஐசி மற்றும் ஐஎஃப்எஸ்சி.
உங்கள் கணக்கு மூலம் உங்கள் ஆவணங்களை பதிவேற்றலாம்:
கணக்குத் தெரிவுகள் > கணக்கு சரிபார்ப்பு அல்லது அவற்றை மின்னஞ்சல் மூலம் [email protected]என்ற முகவரிக்கு அனுப்புங்கள்
கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்திருங்கள்) செயல்முறைகள் தொடர்பாக, செல்லத்தக்க உங்கள் அடையாள அட்டையின் வண்ண நகலையும், உங்கள் பெயர், முகவரி மற்றும் தேதியுடன் உள்ள (மின்சாரம், எரிவாயு, குடிநீர், தொலைபேசி, எண்ணெய், இணையம் மற்றும்/அல்லது கேபிள் டிவி ஒப்பந்தம், வங்கிக் கணக்கு அறிக்கை) சமீபத்திய (3 மாதங்களுக்குட்பட்டது) முகவரிச் சான்று.
"ஆம்": செல்லத்தக்க ஐடி அட்டை அல்லது ஓட்டுநர் உரிமமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
உங்கள் கணக்கு முழுமையாக சரிபார்க்கப்பட்ட உடனேயே உங்கள் கணக்கு நிலையை உறுதிப்படுத்தி தன்னியக்கமான ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வரும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது தங்குமிட முகவரியை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தேவையான ஆவணங்களுடன் உங்கள் கோரிக்கையை அனுப்புங்கள்.
250 யூஎஸ்டி, இருப்பினும் எக்ஸ்டிரேடு எப்போதாவது குறைந்த டெப்பாசிட் அளவை வழங்கும் புரமோஷன்களை செயல்படுத்தும்.
ஆம், உங்கள் டெப்பாசிட் மீது 100% ஊக்கத்தொகை வரை அளிக்கிறோம் (*ஊக்கத்தொகை விதிகள்&நிபந்தனைகளுக்கு ஏற்ப). மேலும் தகவலுக்கு லைவ் சேட் அல்லது மின்னஞ்சல் மூலம் எங்களுடைய தொழில்முறைப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இல்லை, உங்கள் முதல் டெப்பாசிட்டைவிட அதிகமாக இழக்கும் வாய்ப்பு இல்லை.
கிரெடிட்/டெபிட் கார்டுகள், வங்கிப் பரிமாற்றம், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பேபால் மற்றும் பல தெரிவுகள். மேலும் விவரமான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.
டெப்பாசிட்களுக்கு எக்ஸ்டிரேடு கட்டணங்கள் ஏதும் வசூலிப்பதில்லை.
சர்வதேச ஆன்லைன் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளதா என உங்கள் வங்கியில் விசாரிக்குமாறு பரிந்துரைக்கிறோம். அல்லது டெப்பாசிட் தொகை உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டின் தினசரி வரம்பை விட அதிகமாக இருந்திருக்கலாம்.
இல்லை. மூன்றாம் தரப்பினரின் கணக்கிலிருந்து செய்யப்படும் பணம் செலுத்தல்களை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து டெப்பாசிட்களும் உங்கள் சொந்தக் கணக்கிலிருந்து மட்டுமே செய்யப்படவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை 21:00 ஜிஎம்டி முதல் வெள்ளிக்கிழமை 21:00 ஜிஎம்டி வரை டேலைட் சேவிங் நேரங்களில் சந்தை வர்த்தகம் நடைபெறுகிறது. குளிர்காலங்களில் ஞாயிற்றுக்கிழமை 21:00 ஜிஎம்டி முதல் வெள்ளிக்கிழமை 21:00 ஜிஎம்டி வரை சந்தை வர்த்தகம் நடைபெறுகிறது. இருப்பினும், சில விஷயங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு இன்ஸ்ட்ருமெண்டுக்கான வர்த்தக நேரங்களைத் தெரிந்துகொள்வதற்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யுங்கள்.
எக்ஸ்டிரேடில் இருக்கும் அனைத்து பொருளாதாரச் சந்தைகளும் மூடப்பட்டிருப்பதால் எக்ஸ்டிரேடு பிளாட்ஃபார்மும் மூடப்படுகிறது.
எங்களுடைய கல்வி மையம் ஐப் பாருங்கள் மேலும் எங்களுடைய பிளாட்ஃபார்ம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வரை நீங்கள் வர்த்தகம் செய்யவேண்டாம் எனப் பரிந்துரைக்கிறோம். அதன் பிறகு உங்கள் கணக்கில் உள்நுழைந்து வர்த்தகம் செய்யத் தொடங்கலாம்.
எஃப்எக்ஸ் மற்றும் சிஎஃப்டியில் வர்த்தகம் செய்வது, குறிப்பாக அந்த வர்த்தகம் வெளியிலிருந்து பெறப்பட்ட முதலீட்டில் இயங்கும் தன்மை காரணமாக இழப்பு அபாயங்களுக்கு உட்பட்டது. எங்களுடைய முழுமையான அபாய எச்சரிக்கைகளப் படிப்பதற்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த வலைத்தளம் மற்றும் வெளிப்படுத்தல் ஆவணங்களில் உள்ள தகவல் பொதுவான தன்மையுடையவை, உங்கள் தனிப்பட்ட சூழல்கள், நிதி நிலைமை அல்லது தேவைகளை கருத்தில் கொண்டவை அல்ல. நீங்கள் எங்களுடைய வாடிக்கையாளர் ஒப்பந்தத்தை கவனமாகப் படித்து, இது போன்ற விஷயங்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு உகந்ததா என்று முடிவெடுப்பதற்கு முன்னர் தனிப்பட்ட ஆலோசனையை நாடுங்கள்.
நிதியளிக்கப்பட்ட வர்த்தக கணக்கு, அதி வேக இணைய இணைப்பு கொண்ட ஒரு கணினி அல்லது மொபைல் சாதனம் (ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு அல்லது விண்டோஸ் மென்பொருளில் இயங்குபவை) ஆகியவை உங்களுக்குத் தேவை. உங்கள் முதல் வர்த்தகத்தை செய்வதற்கு முன்னால் எங்களுடைய கல்வி மையத்தில் உள்ளவற்றை முழுமையாகப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்
மிகப்பெரிய வர்த்தக நிலையை சிறிய அளவு டெப்பாசிட் மூலம் தொடங்குவதற்கு லீவரேஜ் அனுமதிக்கிறது வர்த்தகர்களுக்கு கிடைக்கும் லீவரேஜ் 400:1 என்ற அளவில் மாறுபடுகிறது
உதாரணமாக 100:1, இதன் பொருள் என்னவென்றால் $100,000 வரையிலான கரன்சி வர்த்தகத்தை $1,000 டெப்பாசிட் வைத்துக்கொண்டு செய்யமுடியும். உங்கள் டெப்பாசிட்டை விட பெரிய அளவிலான தொகையை வர்த்தகம் செய்வதற்கு கடனைப் பயன்படுத்தவதற்கு லீவரேஜ் அனுமதிக்கிறது.
லீவரேஜ் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உங்கள் டெப்பாசிட் மூலதனத்தை இழக்கும் அபாயமும் அதிகமாக இருக்கும். லீவரேஜ் உங்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறிய டெப்பாசிட் மூலம் பெரிய அளவு முதலீட்டை கட்டுப்படுத்துவதில் லீவரேஜ் உங்களுக்கு உதவும் அதே நேரத்தில், அது எதிர்மறையான விலை மாற்றங்களுக்கும் உங்களை உள்ளாக்கும்.
இயல்பான லீவரேஜ் விகிதத்தை உங்களால் மாற்ற முடியாது.
நிதி சார்ந்த இன்ஸ்ட்ருமெண்டின் விலை விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தின் சிறிய யூனிட்தான் பிஐபி (கரன்சி ஜோடி விகிதம்).
ஸ்பிரெட் என்பது பிட் விலைக்கும் கேட்கப்பட்ட விலைக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.
நீண்ட நிலை - வாடிக்கையாளர் சொத்தை வாங்குவது, குறுகியநிலை என்பது வாடிக்கையாளர் சொத்தை விற்பது.
அடிப்படை கரன்சி அளவு * பிஐபிகள் = கோட் கரன்சியின் மதிப்பு
1 பிஐபி ன் மதிப்பு யுரோ/யுஎஸ்டி ல்= 1 தொகுப்பு (100 000 €)*0.0001= 10 யுஎஸ்டி
1 பிஐபி ன் மதிப்பு யுரோ/சிஹெச்எஃப் ல்= 1 தொகுப்பு (100 000 €)*0.0001= 10 சிஹெச்எஃப்
1 பிஐபி ன் மதிப்பு யுரோ/ஜேபிஓய் ல்= 1 தொகுப்பு (100 000 €)*0.01= 1000 ஜேபிஓ.
சந்தை அதிகமாக நிலையற்று இருக்கும்போது ஸ்லிப்பேஜ் நிகழ்கிறது, இது வழக்கமாக முக்கியமான பொருளாதார செய்திகளால் ஏற்படுகிறது. இதன் விளைவாக நீங்கள் குறிப்பிட்டதிலிருந்து மாறுபட்ட விகிதத்தில் உங்கள் நிலை செயல்படுத்தப்படுகிறது; அடுத்து கிடைக்கும் விலையில் மூடப்படுகிறது.
சந்தை நிலையற்று இருக்கும்போது உங்களுக்கு ஏற்படும் அபாயத்தை சமாளிப்பதற்கு சிறந்த வழி, உங்கள் கணக்கு எல்லா நேரங்களிலும் போதுமான அளவு லாபத்துடன் இருப்பதை உறுதிசெய்வதே ஆகும். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:
✔ திறந்துள்ள உங்கள் நிலைகளின் நிலையைக் கண்காணியுங்கள்.
✔ கீழிறங்கும் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இழப்பு-நிறுத்த அளவைக் குறிப்பிடுங்கள்.
✔ உங்களுக்குத் தேவையான லாபத்தைவிட அதிகமாக உங்கள் கணக்கில் பணம் வைத்திருங்கள்.
குறிப்பிட்ட விலை அல்லது அதைவிடச் சிறந்த விலையில் நிதி இன்ஸ்ட்ருமெண்ட்களை விற்பது அல்லது வாங்குவதற்கு பயன்படும் டேக் ப்ராஃபிட் ஆர்டர்களை லிமிட் ஆர்டர்கள் என்கிறோம்.
உங்கள் வர்த்த கணக்கில் உள்நுழைந்து, கணக்குத் தெரிவுகள் > நிதி மேலாண்மை > மானிடரி ஹிஸ்டரி அல்லது செயல்பாடு அறிக்கை என்பதைப் பாருங்கள்
ஸ்டாப் லாஸ் மற்றும் டேக் ப்ராஃபிட்ஸ் இரண்டும் ஆர்டர்கள்தான், இவை திறந்துள்ள நிலைகளை மூடுவதற்கு சந்தையில் இடப்படுபவை. "ஸ்டாப் லாஸ்" என்பது இன்னும் மோசமான விலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு மேலும் "டேக் ப்ராஃபிட்" என்பது அனுகூலமான விலை மாற்றத்திலிலிருந்து லாபம் பெறுவதற்கானது.
மார்ஜின் கால் நிலை உருவாகும்பட்சத்தில் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்டிரேடு தெரியப்படுத்தும் உங்கள் மார்ஜின் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும், ஒவ்வொரு நேரத்திலும் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறியும் பலனை அது அளிக்கிறது. அந்த குறிப்பிட இன்ஸ்ட்ருமெண்டுக்குத் தேவையான மார்ஜினை விட உங்கள் மார்ஜின் டெப்பாசிட் குறையும் பட்சத்தில், மார்ஜின் கால்கள் திறந்திருக்கக்கூடிய உங்களின் நிலையை விற்றுவிடும்.
சில இன்ஸ்ட்ருமெண்ட்கள் ஒப்பந்த அம்சங்களின் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. அந்த இன்ஸ்ட்ருமெண்ட்களுக்கு குறிப்பிட்ட காலாவதி தேதி உள்ளது, அந்த நாளில் ஓபன் டீல்கள்/லிமிட் ஆர்டர்கள் மூடப்படுகின்றன.
காலாவதி தேதியுள்ள அந்த இன்ஸ்ட்ருமெண்ட்களுக்கு, அதனுடன் தொடர்புடைய விவரங்கள் டேப்பை கிளிக்செய்து பார்க்கலாம்.
போக்கு என்பது சந்தையின் பொதுவான நிலை அல்லது ஒரு சொத்தின் விலை பற்றிய நிலை, மேலும் போக்குகள் குறுகியதிலிருந்து இடைப்பட்ட மற்றும் நீண்டகால அளவில் மாறுபடலாம்.
நுட்பமான பகுப்பாய்வில், சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் ஆகியவை பங்கின் விலை மாற்றம் முன்நிர்ணயம் செய்யப்பட்ட விலை அளவுகளில் நின்று எதிர்திசையில் பயணிப்பதைக் குறிக்கிறது.
கிடைக்கும் இருப்பு: துவக்கநிலை மார்ஜினாகப் பயன்படுத்தப்பட இருக்கும் தொகை.
(பங்கு) – (பயன்படுத்திய மார்ஜின்)
ஈக்விட்டி: டெபாசிட்கள் - பணம்எடுப்புகள்+ போனஸ் + நிறைவான லா&ந + திறந்திருக்கும் லா&ந
உங்கள் புதிய நிலையைத் திறந்ததாக வைக்க, உங்கள் கணக்கில் உள்ள ஈக்விட்டி மொத்த பராமரிப்பு மார்ஜின் நிலையைத் தாண்டி விடும். பராமரிப்பு மார்ஜின் நிலைத் தேவைகள் ஒவ்வொரு நிதிச் சாதனத்திற்கும் குறிப்பிட்டதாக இருக்கும். எக்ஸ்டிரேடு எப்போதும் ஒவ்வொரு தனிப்பட்ட இன்ஸ்ட்ருமெண்டுக்கும் உரிய பராமரிப்பு மார்ஜின் நிலையைக் காட்டும்.
கணக்கின் அடிப்படை நாணயத்தில் பிரித்து வைக்கப்பட்ட மொத்த லாபம்&நஷ்டம்.
கணக்குத் தெரிவுகள் > நிதி மேலாண்மை > பணம் எடுத்தல் கோரிக்கைகள் என்பதில் கிளிக் செய்யவும்.
தற்போதைய வர்த்தக நாளின்போதான அதிகபட்சம் ஏலத்தையும் குறைந்தபட்ச கேட்பு விலையையும் குறிக்கிறது.
போதுமான பங்கு நிதி இருந்து குறிப்பிட்ட நிதி இன்ஸ்ட்ருமெண்ட்கள் பொது எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யப்படும் நேரத்தில் மட்டும்தான் வர்த்தகம் தொடங்கமுடியும்.
இன்ஸ்ட்ருமெண்ட் "விவரங்கள்" மீது கிளிக் செய்யுங்கள்.
நேரடி உதவிக்கு எங்களுடைய வாடிக்கையாளர் உதவிமையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இன்ஸ்ட்ருமெண்டின் நட்சத்திர சின்னத்தை கிளிக் செய்யுங்கள்.
ஸ்பிரெட் என்பது ஒரு நிதி இன்ஸ்ட்ருமெண்டின் ஏலம் மற்றும் கேட்பு விலைக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.
ஒவ்வொரு தயாரிப்புக்குமான ஸ்பிரெட் மதிப்பைப் பார்ப்பதற்கு எங்களுடயை சி.எஃப்.டிகள் பட்டியலைப் பாருங்கள்.
எக்ஸ்டிரேடு வர்த்தக பிளாட்ஃபார்ம் திரை "விவரங்கள்" என்பதில் காட்டப்பட்டது போல் குறிப்பிட்ட நேரத்துக்குப் (தோராயமாக 22:00ஜி.எம்.டி (21:00டி.எஸ்.டி)) பிறகு ஒரு நிலையை திறந்து வைத்தால், உங்களுக்கு எக்ஸ்டிரேடு நிதிப் பிரீமியம் பொருந்தும், அது உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். தொடர்புடைய நிதியளிப்பின் பலன்/செலவும் பிரீமியமில் அடங்கும்.
வர்த்தகப் பணமளிப்பு வர்த்தகம் செய்யப்பட்ட (ஒரு நிலையைத் தொடங்கிய/முடித்த) நாளுக்குப் பின் (T+2) இரண்டு வணிக நாட்களில் செலுத்தப்படும். இந்த பணம் செலுத்தப்படும் நாள் வேல்யு டே என்றும் அழைக்கப்படும்.
ஒவ்வொரு தயாரிப்புக்குமான பிரீமியம் விற்பனை மற்றும் பிரீமியம் வாங்கும் கட்டணங்களைப் பார்ப்பதற்கு எங்களுடயை சி.எஃப்.டிகள் பட்டியலைப் பாருங்கள்.
செயல்பாடில்லாத எக்ஸ்டிரேடு கணக்குகள் மதிப்பிடப்பட்டு மாதத்திற்கு $50 USD செயபாடின்மைக் கணக்குக் கட்டணமாக விதிக்கப்படும். 3 மாத காலத்துக்கு எந்த வர்த்தகச் செயல்பாடும் நிகழாவிட்டால் கணக்குச் செயலற்றதாகக் கருதப்படும்.
டெப்பாசிட்/பணம் எடுத்தல் செயலாக்கத்துக்காக எக்ஸ்டிரேடு எந்தக் கட்டணமும் விதிக்கவில்லை. இருப்பினும் வங்கிகள் மற்றும் /அல்லது இடைப்பட்ட வங்கிகளுக்கான செயலாக்கக் கட்டணங்கள் பொருந்தக்கூடும். அத்தகைய கட்டணங்களுக்கு நாங்கள் எந்தப் பொறுப்பும் ஏற்க மாட்டோம்.
கணக்குத் தெரிவுகள் > நிதி மேலாண்மை > பணம் எடுத்தல் கோரிக்கைகள் என்பதை கிளிக் செய்தால், உங்கள் பணம் எடுத்தல்களுக்கான அனைத்து விவரங்களையும் கொண்ட புதிய விண்டோ தோன்றும்.
உங்களுடைய பணம் எடுத்தல் கோரிக்கையின் நிலை "நிலுவையிலுள்ளது" எனக் காட்டும்போது எந்த நேரத்திலும் அதை ரத்துசெய்யலாம்.
உங்களுக்கு திறந்த நிலைகள் இருந்தால், உங்களது மொத்த இருப்புத் தொகையை உங்களால் எடுக்க முடியாது. பராமரிப்பு மார்ஜினைப் பராமரிக்க குறைந்தபட்சத் தொகை வேண்டியிருக்கிறது.
(இருப்புத் தொகை – பராமரிப்பு மார்ஜின்) மற்றும் மார்ஜின் >= 1% = அதிகபட்ச பணமெடுத்தல் தொகை
பணம் எடுத்தல் கோரிக்கைகளை செயல்படுத்த 5 வேலை நாட்கள் வரை ஆகும். எங்கள் கட்டுப்பாட்டை மீறி, மூன்றாம் தரப்பு பணம் எடுத்தல் முறைகளால் தாமதங்கள் ஏற்படுக்கூடும் (அதாவது, கிரெடிட் கார்டு நிறுவனம், ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் வங்கி அல்லது பரிமாற்றங்களைத் தாமதிக்கும் இடைநிலை வங்கிகள், அதிகபட்சமாக 3 வாரங்கள் வரை ஆகலாம்).
டெப்பாசிட் செய்யப்பட்ட அதே முறையில் உங்கள் பணம் எடுத்தல் செயலாக்கப்படும். கிரெடிட் கார்டு மூலம் டெப்பாசிட் செய்தால், பணம் எடுத்தல் மூலம் வரும் தொகை அந்த கிரெடிட் கார்டுக்கு அனுப்பிவைக்கப்படும். அதுபோல, வங்கிப் பரிமாற்றம் மூலம் ஒரு டெப்பாசிட் செய்யப்பட்டால் எடுக்கப்படும் பணமும் உங்கள் வங்கிக் கணக்கிற்கே பரிமாற்றம் செய்யப்படும். ஈ-வாலட் மூலம் செய்யப்பட்ட பிற டெபாசிட்கள் வங்கிப் பரிமாற்றம் அல்லது ஸ்க்ரில்/நெட்டெலர் ஈ-வாலட் மூலம் திருப்பி வழங்கப்படும்.
பணம் எடுத்தல் செயல்முறையை பின்பற்றுங்கள், பணம் நீங்கள் டெப்பாசிட் செய்த அதே முறையில் திருப்பி அளிக்கப்படும்.
உங்கள் கணக்கில் உள்நுழையுங்கள், கணக்குத் தெரிவுகள்> நிதி மேலாண்மை > பணம் எடுத்தல் கோரிக்கைகள் > சென்று நிலுவையிலுள்ள பணம் எடுத்தல் கோரிக்கைகள் மீது கிளிக் செய்யுங்கள்.
படிவத்தில் பேனாவால் கையொப்பமிடுங்கள், வர்ச்சுவல் கையொப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு பாதி மட்டுமின்றி முழுமையான படிவத்தை எங்களுக்கு அனுப்புவதை உறுதி செய்யுங்கள். எங்களுடைய நிறுவன லோகோ தெரியும்படியான பூர்த்திசெய்யப்பட்ட முழுமையான படிவம் எங்களுக்குத் தேவை.
நீங்கள் கோரிக்கையைச் செய்யும் அதே தேதி உங்கள் பணம் எடுத்தல் படிவத்திலும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
பணம் திருப்பி அளித்தல் வங்கிப் பரிவர்த்தனை மூலமாக அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாக செய்யப்பட்டால் வழக்கமாக இதற்கு 10 வேலை நாட்கள் வரை ஆகும். ஈ-வாலட் பணம் அளித்தல்கள், உங்கள் பணம் எடுத்தல் அங்கீகரிக்கப்பட்ட அதே கணத்தில் உங்கள் கணக்கில் தோன்றும்.
உங்களுக்கு உதவுவதற்கு தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் உதவிமையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
Get started with your Xtrade account today
This website uses cookies to optimize your online experience. By continuing to access our website, you agree with our Privacy Policy and Cookies Policy . For more info about cookies, please click here.
or